எமது நிலையத்தின் அங்கத்தவரான திரு திருமதி சிவநேசன் சிவம் அவர்களின் மகளான செல்வி சிந்துஷா அவர்களுக்கு கண்
பார்வையில் சிறு பிரச்சனை இருந்ததால் அவரால் தொடர்ந்தும் கல்வி கற்க முடியாது என்ற நிலையில் இருக்கிறார் அவருக்கான கண்ணாடியை வாங்குவதற்கு உதவுமாறு எம்மிடம் கேட்டதுக்கு அமைவாக, பிரான்சு நாட்டில் வாழும் எம் நிலைய உறுப்பினர் திரு சின்னையா சிவநாதன் (சுரேஸ் -உமா) குடும்பத்தினர் கண்ணாடி வழங்குவதற்கான முழு செலவையும் பொறுப்பேற்றனர். வைத்தியரின் ஆலோசனைப்படி இன்று அச்சிறுமிக்கு நிலைய முன்றலில் வைத்து நிலைய ஆரம்ப கால உறுப்பினர் திரு சின்னையா அவர்களால் வழங்கப்பட்டது. இவ்வுதவியை செய்த நல்லுள்ளத்துக்கு நிலையம் சார்பாகவும் சிறுமியின் குடும்பம் சார்பாகவும் நன்றியுடன் கரம் பற்றி நிற்கின்றோம்.— mitSinnathamby Kumarathas und 84 weitere Personen in Pungudutivu West, Sri Lanka.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக