சிவலைப்பிட்டி சனசமூக நிலையத்தின் தூரநோக்கு: (1)வறிய மாணவர்களின் கல்வியறிவை மேம்படுத்தல். (2)வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். (3)நன்னீர் குளங்கள், கிணறுகளை புனரமைத்தல், பராமரித்தல். (4)எமது உள்ளூர் வளங்களை கொண்டு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல். (5)எமது மண்ணின் விழுமியங்களை பாதுகாத்தல்.
திங்கள், 3 நவம்பர், 2014
சிவலைப்பிட்டி சனசமூக நிலையம் 29.12 1952 ஆம் ஆண்டு அமரர் சுப்பையா செல்லத்துரை (முத்தையா வாத்தியார்) அவர்களின் முயற்சியால் அன்று காளி கோவிலடியில் கூடி நின்றவர்களை கூட்டி நிலையத்தின் அவசியத்தை விளக்கி அங்கு நின்றவர்களிடத்தில் ஒவ்வொருவரும் நிதிப்பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கு நின்றவர்களின் நிதி பங்களிப்புடன் (99ரூபாய் 75 சதம்) நிதியுடன் சிவலைப்பிட்டி சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பகால நிர்வாக விபரமும்: போசகர். சு.செல்லத்துரை( முத்தையா வாத்தியார்) தலைவர்: சோ.இராமலிங்கம், உபதலைவர்: க.கணபதிப்பிள்ளை, செயலாளர்: சு.சண்முகம், உபசெயலாளர்: வை.நாகேஸ், பொருளாளர்: ஆ.கண்ணையா ஆகியோரின் நிர்வாக அலகுடன் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)