திங்கள், 19 ஜனவரி, 2015

நன்றியுடன் கரம் பற்றி நிற்கின்றோம்! 
அண்மையில் எமது நிலைய உறுப்பினரும், அம்பாள் விளையாட்டுக்கழக வீரனுமான அமரர் தர்மலிங்கம் இராஜேஸ்வரன் அவர்களின் மரண செய்தி அறிந்து புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து எம்மோடு தொடர்பு கொண்டு அன்னாரின் குடும்பத்தினருக்கு எம்மால் இயன்ற சிறிய உதவியை செய்ய போகிறோம் என்று கேட்டுக்கொண்டனர். அந்த வகையில் பிரான்சு, இலண்டன், நோர்வே ஆகிய நாடுகளில் வசிக்கும் எமது நிலைய அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் இணைந்து அன்னாரின் குடும்பத்தினருக்கு 166410,00 ரூபாய் பணத்தொகையை நிலைய நிர்வாகம் ஊடாக வழங்கி இருந்தனர். இவ்வுதவியை செய்த நல்லுள்ளங்களுக்கு அன்னாரின் குடும்பத்தின் சார்பாகவும், சிவலப்பிட்டி சனசமூக நிலையம் சார்பாகவும் நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக