சனி, 21 ஏப்ரல், 2012

ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------
புங்குடுதீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிவலைப்பிட்டி தம்பர் கடை சந்தியடி ,புளியடிச்சந்தி,நுணுக்கல் ,தொழிலாளர் புரம் ,மானாவெள்ளை,  
      போன்ற பிரிவுகளை ஒட்டு மொத்தமாக சின்ன இறுபிட்டி என்று அழைப்பது வழக்கம் .இந்த பிராந்தியத்தின் சிற்பி அல்லது வழிகாட்டி என்றால் மக்களின் கை அம்மான் என்று செல்லமாக அழைக்கப்படும் சிவலிங்கத்தையே சுட்டி நிற்கும் .இங்கேயே பிறந்து சிறுவயது முதலே சமூக  சேவையையே தனது முழுமூச்சாக கொண்டு புங்குடுதீவு மண்ணின் மேற்கு பக்கத்தை முன்னேற செய்த ஒரு ஒளிவிளக்கு இவர்..01 . 04 . 1948 . இல் பிறந்த சிவலிங்கம் அவர்கள்  சிவலைபிட்டி சன சமூக நிலையம் ,காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலயம் .என்பவற்றில் செய்யாத பணிகளே இல்லை எனலாம் . சிவலைபிட்டி சன சமூக நிலையத்தின் ஆரம்ப காலம் தொட்டு அதன் எல்லா வகை நிர்வாக பொறுப்பிலும் இருந்து சிறப்பித்தவர் .அத்தோடு தனக்கு பின்னால் வழிநடத்தவென ஏராளமான இளைஞர்களை பண்படுத்தி மெருகேற்றியவர் .அதனாலோ என்னவோ அம்மானின் விரல் அசைவை கண்டு வீறு கொண்டெழுந்து ஊருக்கு சேவை செய்ய வருடம் தோறும் ஏராளமான வாலிப உள்ளங்கள் போட்டி போட்டு முன்வந்தன.சிவலைப்ட்டி சனசமூக நிலையம் நடத்துகின்ற விளையாட்டு போட்டிகள், நாடக   விழாக்கள் ,சமூகத்  தொண்டுகள் எல்லாவற்றிலும் இவர் முன்னின்று வழி நடத்தினர் .பின்னாளில் இவர் வழிகாட்ட இளம் சமுதாயத்திடம் பல பொறுப்புகளை விட்டு கொடுத்து ஆலோசகராக ஓங்கி நின்றார் .ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற விளையாட்டு போட்டிகள் முடிய இரவு நடைபெறும் பரிசளிப்பு விழாவில் இடம்பெறும் ஏராளமான நாடகங்களை எழுதி நெறிப்படுத்தி நடித்தும் உள்ளார் .இவர் நடித்த பெண் வேடங்கள் சிறப்பான முத்திரை பதித்தவை .கோவலன் கண்ணகி,வஞ்சிக்கபட்டவள்,பண்டாரவன்னியன் போன்றவை அவற்றில் பிரபலமானவையாகும்  .காளி கோவில் நிர்வாகத்திலும் பலமட்டதிலும் அலங்கரித்து அந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கு துணைபோனவர் .சிவலைபிட்டி ச. ச.நிலையத்தின் பணியான  இந்த ஆலய திருவிழா கால அன்னதான சேவை பொறுப்பை திறம்பட செய்து வந்தார் .மது ஒழிப்புக் கழகம் ,இணக்க சபை போன்ற அமைப்புகளும் இவரை உள்வாங்கி சிறப்பு பெற்றன.,தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றின் முழுமூச்சான அரசியல் பணிக்கு தன்னை இணைத்து கொண்ட இவர் பின்னாளில் தாயக விடுதலைக்கான பங்களிப்பையும் செய்து வந்தார் .இதனை கண்ணுற்ற மாற்றுகருத்து பச்சோந்திகள் .22 .11 .1988  இல் .அநியாயமாக  இவரது உயிரை இளம் வயதிலேயே பலிகொண்டு விட்டனர்   .ஆனாலும் சிவலைபிட்டி சனசமூக நிலைய சிற்பி சிவலிங்கம் என்றே இன்றும் இந்த மண்ணின் மைந்தர்கள் சொல்லி கொண்டே இருக்கிறார்கள் .இருப்பார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக