வெள்ளி, 25 மே, 2012


சுவிஸ் .பாரிஸ் ,லண்டன் வெற்றிகரமான "புங்குடுதீவு மான்மியம்" நூல் வெளியீடு. இன்னும் நிகழ்வுகள் தொடர்கின்றன .ஞாயிறன்று கனடா மொன்றியலில் .

 ""புங்குடுதீவு மான்மியம் "" நூல் வெளியீட்டு விழா ஐரோப்பிய  நாடுகளில் வெற்றிகரமாக நடைபெற்றதை தொடர்ந்து தமது சிறப்புமிகு பயணத்தை முடித்துக்கொண்டு கனேடிய பழைய மாணவர்சங்க பிரதிநிதிகள் மூவரும் கனடா திரும்பியுள்ளனர் . இங்கிலாந்து தலைநகர் லண்டனில்  புங்குடுதீவு நலன்புரி சங்கம் இந்த வெளியீட்டை சிறப்பாக நடத்தி வைத்தது .பாரிசில் உயர்திரு .இலங்கையர் கனகசபை அரியரத்தினத்தின் முயற்சியில் ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது . சுவிட்சர்லாந்தில் பெர்னில் உள்ள ரூபிகேன் என்னும் இடத்தில் இந்த வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .இந்த விழாவில் திரு.செல்வம் அடைக்கலநாதன் (பா.உ. த.தே.கூ.) அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கு பற்றிய விழா இனிதே நடைபெற்றது . சுவிசில் விழா நடைபெற்ற அதே நாளில் வேறு பல முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருத போதும் நூறு பேர் வரையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது . தவிர்க்க முடியாத காரனகளால் சமூகமளிக்க முடியாமல் போன மக்கள்  கனடா பிரதிநிதிகளை சந்தித்து நூலை பெற்றுக் dகொண்மை வெற்றிகரமாக நடந்தேறியது .அத்தோடு தங்கள் இல்லங்களுக்கு வரவழைத்து வரவேற்பு வழங்கி நூலை வந்கியமையும் aமறக்க முடியாததாக அமைந்தது .சுவிசில் மட்டும் சுமார் ஏழாயிரம் பிரான்குகளுக்கும் சற்று அதிகமாக நூலுக்கான வரவு நிதியாக கிடைத்தமை ஒரு வரலாற்றுப் பதிவாகும் எல்லோருக்கும் ஏற்பாட்டாளர்கள்  தமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் 

சுவிஸ் வெளியீட்டு விழாவையொட்டி சகல வழிகளிலும் எமக்கு உறுதுணையாய் இருந்து ஒத்துழைத்த பின்வருவோருக்கு விசேசமாக நன்றி தெரிவித்துக்  கொள்கிறோம் 

இராசமாணிக்கம் ரவீந்திரன் 
அரியபுத்திரன்  நிமலன் 
சிவசம்பு சந்திரபாலன் 
செல்லத்தம்பி சிவகுமார் 
சுப்பிரமணியம் சண்முகநாதன் 
அருணாசலம்  திகிலழகன் 
வில்வரத்தினம் பகீரதன் 
தம்பையா பிரேமானந்தன் 
துரைராசா சுரேந்திரராசா 
கந்தையா கணேசராசா 
கந்தையா தவசெல்வம் 
சின்னதுரை நாகரத்தினம் 
ராஜேந்திரம் இந்திரசீலன் 
ராசையா  சண்முகராசா 
வேலாயுதபிள்ளை கனகராசா 
கந்தையா மணியழகன் 
சோமசுந்தரம் கைலைவாசன் 
தியாகராசா  செல்வேந்திரராசா 

வெள்ளி, 4 மே, 2012


சுவிசில் ^^புங்குடுதீவு -மான்மியம்^^நூல்வெளியீட்டு விழா ^

எதிர்வரும் 13.05.2012  அன்று மாலை சுவிஸ்   பேரன்  நகரில்  Rubigen என்னும்    இடத்தில் Worbstzr 13  என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில்  இந்த நூல்வெளியீடு இடம்பெறவுள்ளது.விழாவில் தி.கருணாகரன் (கனடா புங்குடுதீவு  பழைய மாணவர் சங்க தலைவர்) , ந.தர்மபாலன், முன்னாள் அதிபர்,புங்குடுதீவு மகா வித்தியாலயம், குணா செல்லையா (முன்னாள் தலைவர் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் )ஆகியோர் வந்து சிறப்பிகவிருக்கின்றனர் மேலதிக .விழா  மண்டப விபரம் பின்னர் அறியத்தரப்படும் .மே மாதம் பதினோராம்  திகதி லண்டனிலும் பன்னிரண்டாம் திகதி பரிசிலும் இந்த விழா நடைபெறும் 

கனடாவில் நேற்று இடம்பெற்ற புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டு விழா புகைப்படம் 

ஒற்றுமையும் ஆற்றலும் ஒருங்கிணைய உழைப்போம் என்ற வாக்கியத்தை உண்மையாக்கிய புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா 2011ஆண்டு நிர்வாகசபையினர் புங்குடுதீவு மான்மியம் வரலாற்று நூல் வெளியீட்டில் பன்னிரண்டு வட்டாரப் பிரமுகர்களுடன் பிரதம விருந்தினர் மற்றும் சங்கத்தலைவருடன் நூலாசிரியர்.

சனி, 21 ஏப்ரல், 2012

ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )


ஏரம்பு சிவலிங்கம் (அம்மான் )
-----------------------------------------
புங்குடுதீவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிவலைப்பிட்டி தம்பர் கடை சந்தியடி ,புளியடிச்சந்தி,நுணுக்கல் ,தொழிலாளர் புரம் ,மானாவெள்ளை,  

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012


Untitled Album Slideshow: Rasan’s trip from Toronto, Ontario, Canada to Punkudutivu West (near Jaffna), Sri Lanka was created by TripAdvisor. See another Jaffna slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.