திங்கள், 14 மார்ச், 2011

விளையாட்டு

விளையாட்டு 
-------------------
புங்குடுதீவு மண்ணின் விளையாட்டு துறைக்கு வழிகாட்டிகள் சிவலைபிட்டி சனசமூக நிலையத்தினர் என்றால் மிகையாகாது .இன்று நாம் காணும் முன்னேறிய நாடுகளான ஐரோப்பிய அமெரிக்க மண்ணில் நடைபெறும் லீக் முறையிலான கழகங்களுக்கு இடையிலான போட்டிகளை நடத்தும் முறை .அதி தூர சைகிலோட்ட போட்டிகள் என்பன எம் புங்குடுதீவு மண்ணிலேயே சுமார் 45வருடங்களுக்கு முன்னரே நடத்திக்காட்டிய பெருமைக்குரியவர்கள் எமது மண்ணின் சிவலைபிட்டி சனசமூக நிலையத்தினர் தான். பின்வரும் விளையாட்டு முறைகள் நடைமுறைகள் என்பவற்றை உற்று நோக்குங்கள் ஐரோப்பிய முறைக்கு நிகராக உள்ளனவா என்று நீங்களே சிந்தியுங்கள் .

^^^^^   தினமும் மாலை நேரத்தில் மூன்று நான்கு மணித்தியாலங்கள்        கரப்பந்தாட்ட   பயிற்ச்சி 
^^^^^^  சனி ஞாயிறு தினங்களில் வேறு ஒரு இடத்துக்கு சென்று அந்த இடத்து கழகங்களுடன் சினேகா பூர்வ போட்டிகளில் பங்கு பற்றுவது 
^^^^^^     மாதத்துக்கு   ஒரு முறை அல்லது இருமுறை நடைபெறுகின்ற சுற்று போட்டிகளில் பங்குபற்றல் 
^^^^^^வருடத்துக்கு ஒரு முறை தாங்களும் சுற்றுப்போட்டி ஒன்றை நடத்துவது 
^^^^^^^ சினேகா பூர்வ போட்டிகளில் மற்றைய கழகங்களை அழைப்பது 


----------------------------------------------------------------------------------------------------------
வருடந்தோறும் தவறாமல் ஒரு சுற்று போட்டிய ஆண்களுக்காக35 மை ல் போட்டியையும்10 மை ல் போட்டியை  பெண்களுக்காகவும் நடத்துவது 

---------------------------------------------------------------------------------------------
10 மை ல் மரதன் ஓட்ட போட்டியை நடத்துவது 
---------------------------------------------------------------------------------------------------
இப்போது சொல்லுங்கள் லீக் முறையில் மேற்கு நாட்டவர் நடத்தும் உதைபந்தாட்ட போட்டிகள் போன்று அதே விதி முறையில் 
பிரான்ஸ்  டூர் அமெரிக்க டூர்  சுவி டூர் என்பன போன்ற சைக்கிலோட்ட போட்டிகள்     .ஆச்சரியமான விசயங்கள் இவை கொஞ்சம் மனசில் நிறுத்தி சிந்தித்தால் தலை வெடிக்கும் .40 வருடங்களுக்கு முன்னேயே எமது சாதாரண ஒரு கிராமத்தில் வெளி உலகமே அறிந்திராத காலத்திலேயே செய்துள்ளார்கள் என்பதை எண்ணி பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------சிவலைபிட்டி சன சமூக நிலையத்தினர் சுமார் ௪௦ வருடங்களாக ஒவ்வொரு வருடபிறப்பு நாளிலும் விளையாடுபோட்டிக்ளையும் ஆண்டு விழாக்களையும் செய்வர்.
காலை எழு மணிக்கே ஆண்களுக்கான சைக்கிலோட்டபோட்டி தம்பர் கடை சந்தியில் ஆரம்பித்து பிரதான வீதி வழியாக முன்னே ஒலிபெருக்கி வாகனம் உதவி வாகனம் உட்பட பெருங்காடு கிலக்கோஒர் ஆலடி குறிச்சிகாடு மடத்துவெளி வேலணை வங்களாவடி அராலி சந்தி  சரவணை ஊர்கவ்ற்றுரை செருக்கன் சந்தியால் திரும்பி மீண்டும் நாரந்தனை புளியங்கூடல் வங்களாவடி வழியாக ஆரம்பித்த இடத்தை வந்தடையும் செல்லுகின்ற வழி தோறும் பார்வையாளர்கள் ஆதரவு கொடுத்து உற்சாகமூட்டி தண்ணீர் ஊற்றி களைப்பை போக்கி ஒக்குவிக்கும் காட்சி மறக்க முடியாதது .இந்த போட்டிகளில் ரஞ்சன் மகான் செல்வேந்திரராசா கேதான் செல்வன் போன்ற திறமையான வீரர்கள் பரிசினை அள்ளி செல்லும் முக்கிய வீரர்கள் ஆவர்கள்

அடுத்ததாக பெண்களுக்கான பத்து மை ல் சைக்கிளோட்டம் இரட்டை சந்தி வரை சென்று திரும்பும் இதே வழி பாதையில் .இந்த போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளாக கௌசல்யா உதயா போன்றவர்கள் மிளிர்ந்தனர் .

தொடநர்ந்து இதே பாதையில் அங்கள் மரதன் ஓட்ட போட்டியும் நடைபெறும் 
பின்னர் மதியம் முதல் மெய்வல்லுனர் போட்டிகள் எள்ளல வயதினர்க்கும் நடைபெறும் இவற்றில் முக்கியமாக வேடிக்கை தரும் நிகழ்வாக சறுக்கும் கம்பத்தில் வழுக்க வழுக்க  ஏறி காசு எடுக்கும் விளையாட்டு ரசனை மிகுந்ததாகும் 
ஒரு சில வருடங்கள் நுணுக்க ல் பகுதியில் மாட்டு வண்டி சவாரி போட்டிகளையும் நடத்தியமை குறிபிடத்தக்கது .
இதே நாளில் கரப்பந்தாட்ட போட்டிகளும் நடைபெறும் 
மாலையானதும் ஆண்டு விழ சிறப்பாக நடை பெறும் தங்களது இயக்கத்திலேயே நாடகங்கள் மேடைஎட்டுவதும் வேறு கலை நிகழ்சிகளும் இடம்பெறும் பரிசளிப்பு விழாவும் இடம்பெறும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக